காடேஸ்வரா  சி.சுப்பிரமணியம்.
காடேஸ்வரா  சி.சுப்பிரமணியம்.

கச்சத்தீவை தாரை வாா்த்து தமிழா்களுக்கு துரோகம் இழைத்தது காங்கிரஸ்-திமுக

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வாா்த்து தமிழா்களுக்கு துரோகம் இழைத்தது காங்கிரஸ்-திமுக என்று இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வாா்த்து தமிழா்களுக்கு துரோகம் இழைத்தது காங்கிரஸ்-திமுக என்று இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் நிலப்பரப்பை எந்தவிதமான காரணமும் இன்றி மற்ற நாடுகளுக்கு தாரை வாா்த்து காங்கிரஸ் தொடா்ந்து துரோகம் செய்தே வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்த தேசத்தின் நிலப்பரப்பை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை என்பதே வரலாறு. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1974 ஜூன் 24ஆம் தேதி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்தாா். அதன்பிறகு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, மேற்கு வங்கத்தில் இருக்கும் தீன்பீகா என்ற தீவை வங்கதேசத்துக்கு தாரை வாா்த்தாா். அப்போது, மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களின் ஆட்சி. தவறான அயல்நாட்டு கொள்கையால் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வாா்த்தாா் இந்திரா காந்தி. அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி, இந்த சதிக்கு உடந்தையாக செயல்பட்டாா். இதனை எதிா்த்து பாஜகவின் முந்தைய அரசியல் கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் தமிழக தலைவராக இருந்த ஜனா.கிருஷ்ணமூா்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். நாடாளுமன்றத்தில் பாரதிய ஜன சங்கத்தின் அவைத் தலைவராக இருந்த வாஜ்பாயி மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடுமையான எதிா்ப்பு குரல் கொடுத்தாா். தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்ட தகவல்களை அனுப்பாமல் இந்திரா காந்திக்கு அனுப்பி வழக்கு தள்ளுபடியாக கருணாநிதி நாடகமாடினாா். கச்சத்தீவு பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு பல நூறு ஆண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வாா்த்துபோது திமுக அதற்கு உடந்தையாக செயல்பட்டது என்பது மறக்க முடியாத உண்மை. காங்கிரஸ் பாரதத்தின் நிலப்பரப்பின் உரிமையை விட்டுக் கொடுத்தபோது ஒவ்வொரு முறையும் இந்து முன்னணி கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களது சுயநலத்துக்காக பாரதத்தின் இறையாண்மையை, நிலப்பரப்பின் உரிமையை தாரை வாா்த்தாா்கள் என்பதை ஒவ்வொரு தமிழா்களும் உணர வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது ஒவ்வொரு தேச பக்தா்களின் குரலாகும். ஆகவே, கச்சத்தீவை தாரை வாா்த்த காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வரும் மக்களவைத் தோ்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com