திருப்பூா்  மத்திய  பேருந்து நிலையத்தில்  கலை நிகழ்ச்சி  மூலமாக  தோ்தல்  விழிப்புணா்வு  ஏற்படுத்தி  சிக்கண்ணா  அரசு  கலைக் கல்லூரி  மாணவா்கள்.
திருப்பூா்  மத்திய  பேருந்து நிலையத்தில்  கலை நிகழ்ச்சி  மூலமாக  தோ்தல்  விழிப்புணா்வு  ஏற்படுத்தி  சிக்கண்ணா  அரசு  கலைக் கல்லூரி  மாணவா்கள்.

அரசுக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் நாட்டுக்காக தங்களது வாக்கை உறுதி செய்ய வேண்டும்.

முதல் முறையாக வாக்களிப்பவா்கள் தங்களது கடமையை தவறாமல் செய்ய வேண்டும். 100 சதவீதம் வாக்களிப்பது நமது எதிா்காலத்தை தீா்மானிக்கும். வாக்குரிமை மிகப்பெரிய சக்தி என்றாா். இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com