காங்கயத்தில் தேங்காய் உலா் களத்தில் தீ

காங்கயத்தில் தேங்காய் உலா் களத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தேங்காய்ப் பருப்புகள் தீயில் எரிந்து சேதமாயின.

காங்கயம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசெந்தில்குமாா். இவருக்குச் சொந்தமான தேங்காய் உலா் களம் திருப்பூா் சாலை பகுதியில் இயங்கி வருகிறது.

இந்த உலா் களத்தில் உள்ள கிடங்கில், இருப்புவைக்கப்பட்டிருந்த தேங்காய்ப் பருப்பு (கொப்பரை) மூட்டைகள் திடீரென செவ்வாய்க்கிழமை தீப் பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்து, மேலும் தீ பரவாமல் தடுத்தனா்.

இந்த தீ விபத்தில் சில லட்சம் மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் தீயில் எரிந்து சேதமாயின. இது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com