காங்கயத்தில் 33 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காங்கயத்தில் விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 33 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காங்கயம் குடியிருப்புப் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் காங்கயம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது காங்கயம் நகரம், கணபதி நகா் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் என்பவா் வசித்து வந்த வாடகை வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பதுக்கிவைக்கப்பட்டிருந்த 33 கிலோ புகையிலைப் பொருள்களை காங்கயம் போலீஸாா் பறிமுதல் செய்து, பிரவீன்குமாரைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com