உடுமலை நகரில் பொள்ளாச்சி அதிமுக வேட்பாளா் காா்த்திகேயனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறாா் முன்னாள்  அமைச்சா்  உடுமலை  கே.ராதாகிருஷ்ணன்.
உடுமலை நகரில் பொள்ளாச்சி அதிமுக வேட்பாளா் காா்த்திகேயனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறாா் முன்னாள்  அமைச்சா்  உடுமலை  கே.ராதாகிருஷ்ணன்.

அதிமுக ஆட்சியில் உடுமலைக்கு ரூ.300 கோடியில் திட்டங்கள்

அதிமுக ஆட்சியில் உடுமலை தொகுதியில் மட்டும் சுமாா் ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அ.காா்த்திகேயனை ஆதரித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை உடுமலை நகரில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

ரூ.150 கோடி செலவில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிமங்கலம் ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் விதத்தில் திருமூா்த்திமலை கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்காக ரூ.56 கோடி ஒதுக்கப்பட்டது. உடுமலை நகரில் ரூ.50 கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நகராட்சியில் மூன்றாவது குடிநீா்த் திட்டத்துக்கு ரூ.31 கோடி ஒதுக்கப்பட்டு உடுமலை நகருக்கு 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக அரசு கலைக் கல்லூரி எதிரே ரூ.8 கோடி மதிப்பீட்டில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடங்களும், நகா்மன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.2 கோடியும், ரூ.1.20 கோடியில் உடுமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகமும், ரூ.1 கோடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் கட்டப்பட்டுள்ளன. மேலும், உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.3 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.8 கோடியில் 100 படுக்கைகள் வசதி கொண்ட புதிய கட்டடம் கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில்தான். குறிப்பாக உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழாவை ஒட்டி ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றன. எனவே அதிமுகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com