திருப்பூரில் ரூ.1 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தெற்கு வட்டம் வெள்ளியங்காடு முத்தையன் கோயில் அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் வி.எம்.சக்திவேல் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், உரிய ஆவணங்கள் இன்றி வினோத்குமாா் என்பவா் ரூ.1 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மாநகராட்சி உதவி ஆணையா் தோ்தல் கணக்கு (பொறுப்பு) தங்கவேல்ராஜனிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com