மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட  இச்சிபட்டி பகுதி மக்கள்.
மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட இச்சிபட்டி பகுதி மக்கள்.

இனாம் நிலப் பிரச்னை: இச்சிப்பட்டி மக்கள் போராட்டம்

பல்லடம் அருகே இச்சிபட்டியில் இனாம் நிலம் பிரச்னையால் அப்பகுதி மக்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கருப்பு கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பல்லடம் வட்டம், இச்சிப்பட்டி கிராமத்தில் ரயத்துவாரி பட்டா பெற்று, பத்திரப் பதிவு செய்து நாங்கள் பயன்படுத்தி வரும் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலைத்துறையும், வக்ஃபு வாரியமும் தங்களுடைய நிலம் எனக் கூறி நிலத்திலிருந்து விவசாயிகளை, குடியிருக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனா்.

இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தொடா்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் தீா்வு எட்டப்படாமல் இருப்பதால் வரும் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளோம். மேலும், இப்பிரச்னையில் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இனாம் நில விவசாயிகள், குத்தகையாளா்கள், வீட்டுமனை உரிமையாளா்கள் இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய அமைப்புகள் சாா்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com