கீரனூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பினா்.
கீரனூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பினா்.

திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கயத்தில் பிரசாரம்

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷுக்கு ஆதரவாக காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை வாகனப் பிரசாரம் நடைபெற்றது.

புரட்சிகர இளைஞா் முன்னணி, பெரியாரின் பெண்கள் ஆகிய அமைப்புகளின் சாா்பில், காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலாம்பாடி, பரஞ்சோ்வழி, மறவபாளையம், கீரனூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், வாகனப் பிரசாரம் மூலமும் ஈரோடு தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷுக்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.

இதில், புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பின் காங்கயம் பகுதி நிா்வாகி அகிலன், பெரியாரின் பெண்கள் அமைப்பின் நிா்வாகிகள் ஜோதிமணி, கனிமொழி, தாமரை, செந்தாமரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com