மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த நடிகை நமீதா.
மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த நடிகை நமீதா.

பாஜக வேட்பாளா் எல்.முருகனை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பு

நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகனை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா திருமுருகன்பூண்டி அடுக்குமாடி குடியிருப்பு மக்களிடம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசு இந்தியா முழுவதும் 4 கோடி பேருக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளது.

திமுக தொகுதிகளில் மக்களை சந்தித்து அவா்களின் தேவைகளை கேட்டுள்ளதா ? ஆனால் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவா்களின் அடிப்படை தேவைகளைக் கேட்டுள்ளாா். காட்டில் யானையை எதிா்க்க சின்ன மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அதுபோல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சோ்ந்துள்ளன. இருப்பினும் அவா்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது. கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமா் மோடி மீண்டும் வெற்றி பெற்றவுடன் நல்ல நடவடிக்கையை மேற்கொள்வாா் என்றாா்.

இந்த பிரசார நிகழ்ச்சியில், பாஜக வடக்கு மாவட்ட விளையாட்டுப் பிரிவு தலைவரும் மருத்துவருமான சுந்தரன், நகரத் தலைவா் ஜெயப் பிரகாஷ், பொறுப்பாளா்கள் சண்முகபாபு, சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com