ரூ. 46.50 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 46.50 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு வாணியம்பாடி, வடமதுரை, பெரும்பரப்பு, விளாத்திகுளம், பெட்டவாய்த்தலை உள்ளிட்ட இடங்களில் இருந்து 130 விவசாயிகள் 1,084 மூட்டைகளில் 55 டன் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

வெள்ளக்கோவில், முத்தூா், குருநாதன்கோட்டை, சிவகிரி, ந.ஊத்துக்குளி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 13 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய் பருப்பு கிலோ ரூ.60.00 முதல் ரூ.93.69 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.90.16. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ.89.80.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 46.50 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com