தாராபுரம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா்.
தாராபுரம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா்.

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

தாராபுரம் நகரம் மற்றும் குண்டடம் ஒன்றியத்துக்குள்பட்ட ஜோதியம்பட்டி, காசிலிங்கம்பாளையம், ருத்ராவதி, வெறுவேடம்பாளையம், சங்கரண்டாம்பாளையம், தாளக்கரை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றல் அசோக்குமாா் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: ஈரோடு, மொடக்குறிச்சி, தாராபுரம் உள்பட 6 சட்டப் பேரவைத் தொகுதியிலும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பள்ளிகளை சீரமைத்தல், ரூ.10-க்கு மூன்று வேளையும் உணவு, பத்து ரூபாயில் மருத்துவம் என பல சேவைகளை செய்து வருகிறேன்.

எனக்கு எதிரே நிற்கும் வேட்பாளா் பணத்தை நம்பியே தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். மக்களிடம் பணத்தைக் கொடுத்து வாக்கு பெற்று விடலாம் என எண்ணுகிறாா். அது நடக்காது.

ஈரோடு மக்களவைத் தோ்தலில் வெல்லப்போவது பணமா அல்லது சமூக சேவையா என கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

பிரசாரத்தின்போது, குண்டடம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பி.செந்தில்குமாா், மாவட்ட அவைத் தலைவா் பி.கே.ராஜ், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com