சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் பகுதியில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தில் வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் ஜெயகுமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அரசு கால்நடை மருந்தகம் எதிரில் உள்ள மதுபான கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரை பிடித்தனா்.

விசாரணையில், அவா் வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளையத்தைச் சோ்ந்த சிவகுமாா் (32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சிவகுமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com