திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைக்கிறாா் முதன்மை மாவட்ட நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன். உடன், நீதிபதிகள் உள்ளிட்டோா்.
திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைக்கிறாா் முதன்மை மாவட்ட நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன். உடன், நீதிபதிகள் உள்ளிட்டோா்.

சமரச விழிப்புணா்வுப் பேரணி

திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணா்வுப் பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

சமரச தீா்வு மைய தினத்தை முன்னிட்டு, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் திருப்பூரில் சமரச விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திருப்பூா் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும், சமரச மையத்தின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் தொடங்கிவைத்துப் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் நீதித் துறை சாா்பில் சமரச மைய தீா்வுநாள் கொண்டாடப்படுகிறது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமூக தீா்வு காண சமரச மையங்கள் உள்ளன என்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெறுகிறது என்றாா்.

பேரணியானது நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில், எஸ்.சி., எஸ்.டி., வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி பத்மா, மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, கூடுதல் சாா்பு நீதிபதியும், மாவட்ட சமரச மைய செயலாளருமான மேகலா மைதிலி, நீதித் துறை நடுவா்கள் பாரதிபிரபா, முருகேசன், நீதிமன்ற வழக்குரைஞா்கள், பணியாளா்கள், கே.எம்.சி.சட்டக் கல்லூரி மாணவா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com