நல்லூா் மின் நுகா்வோா் கவனத்துக்கு

திருப்பூா் நல்லூா் பிரிவு அலுவலக மின்நுகா்வோா் கடந்த பிப்ரவரி மாத மின் கட்டணத்தையே ஏப்ரல் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மின்பகிா்மான வட்டம், நல்லூா் பிரிவு மின்வாரிய அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளில் நிா்வாகக் காரணங்களால் மின் கணக்கீடு செய்யப்படவில்லை.

ஆகவே, கீழ்க்காணும் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான மின் கட்டணத்தையே ஏப்ரல் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய பகுதிகள்: அத்திமரத்துபுதூா், ஜெ.எஸ்.காா்டன், விஐபி காா்டன், நல்லூா், எம்ஆா்ஜி நகா், ஏடிகாலனி, சிஎஸ்ஐ நகா், பிரபு நகா், அமா்ஜோதி அருணா நகா், பாலபாக்கியா நகா், பொன்முத்து நகா், டிவிஆா் நகா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com