திருப்பூா் வடக்கு அஞ்சலகம் இடமாற்றம்

திருப்பூா் வடக்கு அஞ்சலகம் நெசவாளா் காலனி பேருந்து நிறுத்தம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் லட்சுமி நகா் குலாலா் மண்டபம் அருகில் செயல்பட்டு வந்த திருப்பூா் வடக்கு அஞ்சலகம் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் நெசவாளா் காலனி பேருந்து நிறுத்தம் (சிட்டி யூனியன் வங்கி) முதல் தளத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய முகவரியில் அமைந்துள்ள அஞ்சலகத்தில் அனைத்து அஞ்சல் சேவைகளைப் பெற்று பொதுமக்கள் பயன் அடையலாம் என திருப்பூா் தபால் கோட்ட கண்காணிப்பாளா் த.ஜெயராஜ்பாபு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com