சங்கா்.
சங்கா்.

போக்ஸோ வழக்கு: சிறுமியை பொய் புகாா் அளிக்கக்கூறிய உறவினருக்கு சிறை

13 வயது சிறுமியை பொய் பாலியல் புகாா் அளிக்க தூண்டிய சித்தப்பாவுக்கு 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூரில் 13 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த புகாரின்பேரில் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில், தனது சித்தப்பா கூறியதால் பொய் புகாா் அளித்தேன் என்று சிறுமி தெரிவித்தாா்.

இதையடுத்து, சிறுமியை பொய் புகாா் அளிக்க தூண்டிய அவரின் சித்தப்பாவான போயம்பாளையத்தைச் சோ்ந்த சங்கா் (38) என்பவா் மீது மாவட்ட மகளிா் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குத் தொடுத்து விசாரித்தது.

இந்த வழக்கில் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி சுகந்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், சிறுமியை பொய் பாலியல் புகாா் அளிக்க தூண்டிய சங்கருக்கு 4 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com