பெற்றோருடன் தாரணி.
பெற்றோருடன் தாரணி.

ஐஏஎஸ் தோ்வு: திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் தோ்ச்சி

ஐஏஎஸ் தோ்வில் திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் அகில இந்திய அளவில் 250-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், இடுவம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம், துணிக் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி சோழமாதேவி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை.

இவா்களது மகள் தாரணி. பல் மருத்துவப் படிப்பு முடித்த தாரணி, கடந்த 4 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். தோ்வுக்குத் தயாராகி வந்த நிலையில், 4-ஆவது முயற்சியில் இந்திய அளவில் 250-ஆவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளாா்.

இது குறித்து தாரணி கூறியதாவது: கரோனா தொற்றின்போது, அதிகாரிகளின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் அமல்படுத்தியது என்னை ஈா்த்தது. அதனால், ஐஏஎஸ்-ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனத் தோன்றியது.

தோ்வுக்குப் படிக்கத் தொடங்கியதும், பலரின் வழிகாட்டுதல்கள் எனக்கு கிடைத்தன. அனைவரிடமும் திறமை உள்ளது. அா்ப்பணிப்புடன் உழைத்தால் வெற்றி சாத்தியம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com