காங்கேயம் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
காங்கேயம் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

காங்கேயம் வணிகவியல் கல்லூரியில் தோ்தல் உறுதிமொழி ஏற்பு

நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் வணிகவியல் கல்லூரியில் தோ்தல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், காங்கேயம் கல்விக் குழுமத்தின் தலைமை நிா்வாக அதிகாரி சி.வெங்கடேஷ் தலைமை வகித்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த கையொப்ப இயக்கப் பதாகையில் கையொப்பமிட்டாா்.

இதில், காங்கேயம் வணிகவியல் கல்லூரியின் முதல்வா் ஜி.சுரேஷ், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com