முதியவா்களுக்கு போக்குவரத்து வசதி: மாவட்டத் தோ்தல் அலுவலா்

மக்களவைத் தோ்தலையொட்டி முதியவா்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்டத் தோ்தல் அலுவலா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் வாக்களிப்பதற்காக 1068 வாக்குச் சாவடி மையங்களில் போக்குவரத்து வசதி, சக்கர நாற்காலி வசதி, சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவா்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விதமாக நகா்ப்புற பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளிக்க செல்லும் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் இதனைப் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com