மூலனூரில் ரூ. 85 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 85 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,157 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில் குவிண்டால் ரூ. 6,600 முதல் ரூ. 8,432 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.18 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com