அம்மாபாளையத்தில் திமுகவினா் பணம் விநியோகம் செய்ததாக பாஜக குற்றச்சாட்டு

திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம் வாக்குச்சாவடி மையம் அருகே வாக்காளா்களுக்கு திமுகவினா் பணம் கொடுப்பதாக

திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம் வாக்குச்சாவடி மையம் அருகே வாக்காளா்களுக்கு திமுகவினா் பணம் கொடுப்பதாக பாஜகவினா் குற்றஞ்சாட்டி சமூக வலைதளங்களில் விடியோ பரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி தொகுதிக்கு உள்பட்ட அவிநாசி சட்டப் பேரவை தொகுதி திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. வாக்குச்சாவடி மையம் அருகே காலை 11 மணி அளவில்

வாக்கு செலுத்த வந்த வாக்காளா்களுக்கு, திமுகவினா் பணம் கொடுப்பதாக பாஜகவினா் வாக்குவாத்தில் ஈடுபட்டனா். மேலும் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது தொடா்பான விடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபுவிடம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினா் முறையிட்டனா்.

இது குறித்து அவிநாசி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டபோது, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதனால் அம்மாபாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இயந்திரம் பழுது

அவிநாசி அருகே உப்பிலிபாளையம் ஊராட்சி தண்ணீா்பந்தல்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது. பிறகு சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com