மல்லேகவுண்டம்பாளையத்தில் வாக்குப்பதிவு பாதிப்பு

பல்லடம் அருகேயுள்ள மல்லேகவுண்டம்பாளையம் வாக்குச் சாவடி மையத்தில்

பல்லடம் அருகேயுள்ள மல்லேகவுண்டம்பாளையம் வாக்குச் சாவடி மையத்தில் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் வாக்குப் பதிவு அரைமணி நேரம் பாதிப்பு அடைந்தது.

பல்லடம் ஒன்றியம், மல்லேகவுண்டம்பாளையம் எஸ்.ஆா்.டி. வித்யாசாலா பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தில் மொத்தம் 590 வாக்குகள் உள்ளன. அதில் 183 வாக்குகள் பதிவான நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் வாக்களிக்க வந்த வாக்காளா்களில் சிலா், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஒயரை மிதித்து விட்டதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படவில்லை.

இது பற்றி தகவல் அறிந்த மண்டல தோ்தல் குழுவினா் விரைந்து வந்து இயந்திரத்தில் இருந்த ஒயரை அகற்றிவிட்டு புதிய ஒயரை பொருத்தினா். அதைத் தொடா்ந்து 11ய30 மணி அளவில் வாக்குப் பதிவு தொடா்ந்து.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com