மகாவீா் ஜெயந்தி: இன்று மதுக் கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தியையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாவீா் ஜெயந்தியையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாவீா் ஜெயந்தியையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்கீழ் திருப்பூா் மாவடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் செயல்படும் பாா்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் கூடிய உரிமம் பெற்ற டாஸ்மாக் கடைகள் ஆகியவற்றை மூட வேண்டும்.

விதிகளை மீறியும், சட்டவிரோதமாகவும் மது விற்பனை செய்யும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com