முத்தூரில் ரூ.8 லட்சத்துக்கு எள், தேங்காய், கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள், தேங்காய், கொப்பரை ரூ.8.22 லட்சத்துக்கு விற்பனையானது.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள், தேங்காய், கொப்பரை ரூ.8.22 லட்சத்துக்கு விற்பனையானது.

இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள் 59 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 4,381 கிலோ.

எள் கிலோ ரூ.125.19 முதல் ரூ.145.60 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.138.60. விற்பனைத் தொகை ரூ.6.15 லட்சம்.

3,695 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 1,504 கிலோ. தேங்காய் கிலோ ரூ. 23.15 முதல் ரூ. 29.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 28.50. விற்பனைத் தொகை ரூ.41.166.

64 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 1,951 கிலோ. கொப்பரை கிலோ ரூ. 60.20 முதல் ரூ. 92.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 89.90. விற்பனைத் தொகை ரூ.1.66 லட்சம்.

ஏலத்தில் மொத்தம் 87 விவசாயிகள், 16 வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8.22 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com