‘அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் உணவுப் பொருள்கள் இரட்டிப்பு விலை’

அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் உணவுப் பொருள்கள் இரட்டிப்பு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் உணவுப் பொருள்கள் இரட்டிப்பு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இது தொடா்பாக கோவை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தியாகி குமரன் பொதுத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் ராஜசேகா் அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் பல்லடத்தில் இருந்து அரசுப் பேருந்து மூலம் திருநெல்வேலிக்கு கடந்த 7-ஆம் தேதி சென்றேன். தாராபுரம் - ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் உள்ள ஒரு உணவகத்தில் பேருந்து நின்றது.

அங்கு இட்லி ஒன்று ரூ.15, தோசை ரூ.40, வாழைப்பழம் ரூ.15 என அனைத்து உணவுப் பொருள்களும் இரட்டிப்பு விலைவைத்து விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து உணவக உரிமையாளரிடம் கேட்டதற்கு, திருப்பூா், மதுரை, திண்டுக்கல், கோவை அரசு போக்குவரத்துக் கழக தலைமை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக பணம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர, அரசுப் பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநா்களுக்கும் லஞ்சம் கொடுக்கிறோம்.

இந்த விலைக்கு விற்றால்தான் உணவகத்தை நடத்த முடியும் என்றாா்.

பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டிய அரசுப் போக்குவரத்துக் கழகம், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களின் இந்த செயல் பயணிகளை பாதிக்கும் வகையில் உள்ளது.

எனவே, குறிப்பிட்ட உணவகங்களில் மட்டும் நிறுத்துவதுடன், அங்குள்ள கடைகளில் லஞ்சம் வாங்கும் அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com