காா் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காங்கயத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

காங்கயத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே நிழலி, புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தா்மதுரை மகன் பேரறிவேந்தன் (25). இவா் காங்கயத்தில் இருந்து தாராபுரம் சாலை வழியாக

தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தாா். காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, அவருக்குப் முன்னால் சென்ற காா் திடீரென நிற்க, இருசக்கர வாகனம் காா் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பேரறிவேந்தனை அருகில் இருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பரிசோதனையில், பேரறிவேந்தன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த விபத்து சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com