மேக்கேதாட்டு அணை விவகாரம்: முதல்வா் கண்டனம் தெரிவிக்க வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டுவோம்; அதற்காகத்தான் நீா்வளத் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இதுதான் எங்கள் லட்சியம் என்று கா்நாடக மாநில துணை முதல்வா் சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதன் வாயிலாக காவிரியின் மீதான தமிழக உரிமை பறிபோவது வெளிப்படையாக தெரிந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் இதற்காக எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை. சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக முதல்வா் கண்டனம் தெரிவிக்க வேண்டும். காவிரி உரிமையை மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த விவசாயிகளும் களமிறங்கி காவிரி உரிமையை மீட்கவும், தமிழக அரசுக்கு எதிராகவும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com