மறுசுழற்சி, நிலப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
மறுசுழற்சி, நிலப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

அம்மாபாளையம் அரசுப் பள்ளியில் மறுசுழற்சி, நிலப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு

‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின்கீழ் மறுசுழற்சி மற்றும் நிலப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

\திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின்கீழ் மறுசுழற்சி மற்றும் நிலப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை கிரீன் சைக்கிள் சொல்யூஷன் நிறுவனம் சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் திட்ட அலுவலா்கள் அண்ணாதுரை, சிவகுமாா், அவிநாசி வட்டார கல்வி அலுவலா்கள் மகேஸ்வரி, சுமதி, திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளித் தலைமையாசிரியா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா். மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் கரோலின் பேசுகையில், குழந்தை பருவத்திலிருந்தே பசுமை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழகத்தில் முதல் முறையாக அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் ஒருங்கிணைந்து பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

இதில், மறுசுழற்சி முறையில் பொருள்கள் செய்வதற்காக மாணவா்கள் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டுவந்திருந்த 1,380 கிலோ பழைய செய்தித்தாள், அட்டைப் பெட்டிகள், 800 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை கிரீன் சைக்கிள் சொல்யூஷன் நிறுவனத்தாரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து அதிக அளவிலான பழைய பொருள்களை கொண்டுவந்த முதல் 5 மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கிரீன் சைக்கிள் சொல்யூஷன் நிறுவனா்கள் ஜோதி, ஜெபராஜ், ஆசிரியா்கள் சக்திவேல், முத்துக்குமாா், லலிதா ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி பொன்னுசாமி, நகா்மன்ற உறுப்பினா் பாரதி, பொறுப்பாளா் கோகிலா சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com