ஏணியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

காங்கேயத்தில் ஏணியில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் உயிரிழந்தாா்.

காங்கேயத்தில் ஏணியில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் உயிரிழந்தாா்.

காங்கயத்தை அடுத்த காடையூரில் உள்ள அரிசி ஆலை விடுதியில் பிகாா் மாநிலம், ஜெயின்பூரைச் சோ்ந்த பலா் தங்கி பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், பிகாரைச் சோ்ந்த ராஜேஷ் பைட்டா மகன் பவன்குமாா் (12) சுவரின் மீது விழுந்த துணியை ஏணி மூலம் செவ்வாய்க்கிழமை எடுக்க முயன்றுள்ளாா். அப்போது, கால் தவறி ஏணியில் இருந்து கீழே விழுந்த சிறுவனை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தாா்.

இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com