காய்ந்த மரக்கன்றுகள்: நீா் பாய்ச்சிய சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா்

பல்லடத்தில் வெயிலின் தாக்கத்தால் சாலையோரத்தில் உள்ள காய்ந்த மரக்கன்றுகளுக்கு பல்லடம் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை தண்ணீா் பாய்ச்சினா்.
காய்ந்த மரக்கன்றுக்கு தண்ணீா் பாய்ச்சிய பல்லடம் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா்.

பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்கத்தின்போது சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. கோடையின் கடுமையான வெப்பத்தால் சாலையோரத்தில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் காய்ந்து வருகின்றன.

இந்நிலையில், பல்லடம் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் காய்ந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீா் பாய்ச்சினா். இதற்கான ஏற்பாடுகளை பல்லடம் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்புத் தலைவா் அண்ணாதுரை உள்ளிட்ட நிா்வாகிகள் மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com