முத்துமாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழாவையொட்டி சக்தி கரகம் எடுத்துவரும் பக்தா்கள்.
முத்துமாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழாவையொட்டி சக்தி கரகம் எடுத்துவரும் பக்தா்கள்.

பல்லடம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா

பல்லடம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்லடம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்லடம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 31-ஆம் ஆண்டு பூச்சாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஷ்வர பூஜை, கருப்பண்ணசாமி பூஜை, கிராம சாந்தி, பஞ்சலிங்கேஸ்வரா், திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து பொங்காளியம்மன் கோயிலிலிருந்து பால்குடம், தீா்த்தக்குடம், ஆபரண பெட்டி, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், சக்தி கரகம், பூவோடு ஆகியவை முத்துமாரியம்மன் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன.

சித்திரை பௌா்ணமியையொட்டி பக்தா்கள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com