ரூ.34 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.34 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.34 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு திருச்சி, வாணியம்பாடி, பழனி, வடமதுரை, தேவத்தூா், மங்கலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 39 டன் தேங்காய் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.62.89 முதல் ரூ.98.39 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.34 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com