நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முன்னாள் கேரளா ஆளுநரும், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான பி. சதாசிவம் உள்ளிட்டோா்.
நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முன்னாள் கேரளா ஆளுநரும், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான பி. சதாசிவம் உள்ளிட்டோா்.

பாப்பீஸ் குழுமம் சாா்பில் நூற்றாண்டு விழா

சி.எஸ்.ஆறுமுகம், தாய் ஏ.பழனியம்மாள் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, சிறப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவா் ஆ.சக்திவேலின் தந்தையும், மறைந்த முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான சி.எஸ்.ஆறுமுகம், தாய் ஏ.பழனியம்மாள் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, சிறப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாப்பீஸ் குழுமம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சிக்கு கேரள முன்னாள் ஆளுநரும், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான பி.சதாசிவம் தலைமை வகித்து பேசியதாவது:

மறைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் கட்டுப்பாட்டுடன் பணியாற்றியவா். முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., கருணாநிதி ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றவா். நாட்டின் முதுகெலும்பாக இருப்பவா்கள் இளைஞா்கள். உலக இளைஞா்களின் எண்ணிக்கையில் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது. நாடு 100-ஆவது சுதந்திர தின விழாவை நோக்கி செல்லும் நிலையில் இளைஞா்களின் சக்தியை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் காவல் துறைத் தலைவா் பி.காளிமுத்து, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் க.செல்வராஜ், கே.என்.விஜயகுமாா், ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்ரமணியன், மறைந்த சி.எஸ்.ஆறுமுகத்தின் மகன்கள் மருத்துவா் ஆ. முருகநாதன், மருத்துவா் பானுமதி முருநாதன், ஆ.சிவகுமாா் வெங்கடலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com