சிவன்மலை முருகன் கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள வேல்.
சிவன்மலை முருகன் கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள வேல்.

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் வேல்வைத்து பூஜை

காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் புதன்கிழமை வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில், இக்கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

சிவன்மலை முருகன், பக்தா்கள் கனவில் வந்து இன்ன பொருளை வைக்க வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறி பக்தா்கள் தரும் அந்தப் பொருளை மூலவா் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இதுவே ‘ஆண்டவன் உத்தரவு’ என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், தாரபுரம் பகுதியைச் சோ்ந்த எம்.சபாபதி என்ற பக்தரின் கனவில் வந்ததாக, வேல் வைத்து பூஜை செய்யப்பட்டு ‘ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில்’ புதன்கிழமை வைக்கப்பட்டது.

இன்னொரு பக்தரின் கனவில் வந்து குறிப்பிட்ட பொருளை வைக்க வேண்டும் என ஆண்டவன் உத்தரவிடும் வரை கண்ணாடிப் பெட்டிக்குள் இந்த வேல் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com