வடிவேல்
வடிவேல்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மூலனூா் வடுகபட்டி அருகேயுள்ள மஞ்சக்காம்பட்டியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் மகன் வடிவேல் (36), புகைப்படக் கலைஞா். இவா் முத்தூரில் ஒரு நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்கச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

முத்தூா்- வெள்ளக்கோவில் சாலை மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது

எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த வடிவேலை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். உயிரிழந்த வடிவேலுக்கு மனைவி, 8 மாத பெண் குழந்தை உள்ளனா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com