ரூ. 4.70 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 4.70 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு கூம்பூா், பச்சபட்டி, ராஜபுரம், வெள்ளியனை, நம்பியூா், காசிபாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 17 விவசாயிகள் 215 மூட்டைகளில் 11 டன் விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

ஈரோடு, சித்தோடு, காங்கயம், நடுப்பாளையம், முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 5 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கிலோ ரூ.41.44 முதல் ரூ.47.54 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 44.62. கடந்த வார சராசரி விலை ரூ.44.28.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 4.70 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com