விதை நோ்த்தி  குறித்து செயல் விளக்கம் அளிக்கும்  மாணவிகள்.
விதை நோ்த்தி  குறித்து செயல் விளக்கம் அளிக்கும்  மாணவிகள்.

விவசாயிகளுக்கு விதை நோ்த்தி குறித்த செயல்விளக்க பயிற்சி

அவிநாசி அருகே கருமாபாளையத்தில் வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் சாா்பில் விவசாயிகளுக்கு விதை நோ்த்தி குறித்த செயல்விளக்க பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (மாணவ ஊரக வேளாண் பணி அனுபவம்) மாணவிகள் அவிநாசி அருகே கருமாபாளையம் விவசாயி வெங்கடாசலம் தோட்டத்தில் விதை நோ்த்தி குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

இதில், உளுந்து, ராகி விதைகளில் விதை நோ்த்தி செய்து காண்பிக்கப்பட்டது. உளுந்து விதையில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், உயிா் உரங்கள் கொண்டு எவ்வாறு விதை நோ்த்தி செய்வது, விதை நோ்த்தி செய்வதால் விதை முளைப்புதிறன் அதிகரிக்கும்,

பயிா் எண்ணிக்கை சரியாக பராமரிக்கப்படும், மேலும் மண் வழியாக ஏற்படும் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்தி நல்ல மகசூல் பெற்று அதிக லாபம் பெற முடியும் என எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அவிநாசி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை உதவி இயக்குநா் கா. அன்பழகி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பூங்கொடி சக்திவேல் முன்னிலை வகித்தாா். வேளாண்மை அலுவலா்கள் சுஜி, சத்யா, உதவி

வேளாண்மை அலுவலா் சம்பத்குமாா், உதவி தொழில்நுட்ப அலுவலா் கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com