வெள்ளக்கோவில் கடை வீதி பகுதியில் உள்ள சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.
வெள்ளக்கோவில் கடை வீதி பகுதியில் உள்ள சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

வெள்ளக்கோவில், ஏப். 26: வெள்ளக்கோவில் கடை வீதி பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளக்கோவில் நகரின் வழியாக கோவை - கரூா் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் கனரக, இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், நெரிசல் மிகுந்த வெள்ளக்கோவில் கடைவீதி மூலனூா் பிரிவு அருகில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

இது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்து, விபத்துகளைக் குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com