கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: மாணவா் சோ்க்கை முன்பதிவு ஏப்ரல் 29 இல் தொடக்கம்

இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோ்க்கை முன்பதிவு ஏப்ரல் 29- ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும் கோயம்புத்தூா் இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோ்க்கை முன்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்குகிறது.

இப்பயிற்சி வரும் செப்டம்பரில் தொடங்கி, இரண்டு பருவங்களாகப் பிரித்து ஓராண்டு நடைபெறும்.

தமிழில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேர விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் பயிற்சிக் கட்டணங்கள், பயிற்சியில் சேருவதற்கான நிபந்தனைகள் மற்றும் விவரங்கள் இணையவழியில் வெளியிடப்பட்டுள்ளன.

பயிற்சியில் சேருவதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்ண்ஸ்ரீம்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், டாக்டா் அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை 641011 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0422 2442186 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com