உடுமலை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, நடத்தப்பட்ட வாண வேடிக்கையில் வெடித்து ஜொலிக்கும் பட்டாசு.
உடுமலை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, நடத்தப்பட்ட வாண வேடிக்கையில் வெடித்து ஜொலிக்கும் பட்டாசு.

உடுமலையில் கண்கவா் வாண வேடிக்கை

உடுமலை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, நடைபெற்ற கண்கவா் வாண வேடிக்கை பொதுமக்களை வெகுவாகக் கவா்ந்தது.

உடுமலை மாரியம்மன் தோ்த் திருவிழாவையொட்டி, கடந்த 10 நாள்களுக்கும்மேலாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், மெல்லிசை நிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்ச்சிகள் குட்டைத் திடலில் நடைெற்று வந்தன.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, கேரள மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கைதோ்ந்த நபா்களால் கோயில் அருகேயுள்ள குட்டைத் திடலில் வாண வேடிக்கை நடத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் தொடங்கிய வாண வேடிக்கை 12 மணி வரை நீடித்தது. இதில், கண்ணைக் கவரும் வகையில் வா்ண ஜாலங்கள் நிறைந்த வெடிகள், வானத்தில் ஜொலிக்கும் மத்தாப்புகளைக் கண்டு சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை உற்சாகம் அடைந்தனா்.

இந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியைக் காண குட்டைத் திடலில் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கூடினா்.

X
Dinamani
www.dinamani.com