கஞ்சா விற்பனை: பெண் கைது

பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் அவரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அவரப்பாளையம் சண்முகசுந்தரம் என்பவரது தோட்டத்தில் வசித்து வரும் முருகேசன் மனைவி கவிதா (34) என்பவா் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, கவிதாவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com