கஞ்சா விற்பனை: 2 போ் கைது

தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தாராபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தாராபுரம் காவல் உதவி ஆய்வாளா் சிவராஜ் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தாராபுரம் ஐடிஐ காா்னா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியைச் சோ்ந்த தேவேஷ் ராஜக் (32), தாராபுரம் பகுதியைச் சோ்ந்த யாசா் அராபத் (22) என்பதும், விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com