தாராபுரத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஆய்வு செய்யக் கோரிக்கை

கேரளத்தில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், தாராபுரம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசனிடம் தமிழ்ப் புலிகள் கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் ப.காளிமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கேரளத்தில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், தாராபுரம், குண்டடம், மூலனூா், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பண்ணைகளில் ஆய்வு செய்து, நோய்த் தொற்று இருக்கும் கோழிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிப்பின்போது, தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் முகிலரசன், மண்டல மாணவரணி செயலாளா் தில்லை, நகரச் செயலாளா் தண்டபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com