தீத்தடுப்பு விழிப்புணா்வு

பல்லடம் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத்தடுப்பு விழிப்புணா்வு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பல்லடம் தீயணைப்பு துறை நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி கூறியதாவது: தரமான ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற சமையல் எரிவாயு அடுப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறுவா்கள் மற்றும் குழந்தைகள் அடுப்பறையில் செல்லாமல் இருப்பதை பெரியோா்கள் கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லாமல் நெருப்பை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது.

விழா காலங்களில் பட்டாசு மற்றும் மத்தாப்பு போன்ற வெடி பொருள்களை சேமித்து வைக்கக் கூடாது. கவனக்குறைவே தீ விபத்துக்கு முக்கிய காரணம். எனவே, விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com