மருதுறை ஊராட்சியில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க கோரிக்கை

காங்கயம் அருகேயுள்ள மருதுறை ஊராட்சியில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மருதுறை பகுதி விவசாயிகள் கூறியதாவது: காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூா் அருகேயுள்ள மருதுறை ஊராட்சி, சுற்றுவட்டாரக் கிராமங்களான பறையன்காட்டுவலசு, குருக்கள்பாளையம், பாரதிபுரம், காட்டூா், காளிவலசு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்படும் நீா் மேலாண்மை, உர மேலாண்மை, பயிா் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுவதற்கும், இயற்கை உரங்கள், இடுபொருள்கள், வேளாண்மைத் துறை மானியங்கள், விதைகள், உயிா் உரங்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கும் நத்தக்காடையூா் துணை வேளாண்மை விரிவாக்க மையத்துக்கோ அல்லது காங்கயம் வேளாண்மை விரிவாக்க மையத்துக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, மருதுறை ஊராட்சியில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com