சாலையில் ஏற்பட்டுள்ல வெடிப்பு.
சாலையில் ஏற்பட்டுள்ல வெடிப்பு.

தெக்கலூரில் சாலை அமைத்த ஓராண்டுக்குள் பழுது

அவிநாசி அருகேயுள்ள தெக்கலூரில் சாலை அமைத்து 8 மாதங்களே ஆன நிலையில், சாலையில் ஏற்பட்டுள்ள வெடிப்பால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

அவிநாசி ஒன்றியம், தெக்கலூா் ஊராட்சி சேரன் நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாலை அமைக்க ஊராட்சி பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சாலை அமைத்த 8 மாதங்களுக்குள்ளே சாலையில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், சாலை அமைக்கும்போது, முறையான சாக்கடைக் கால்வாய் அமைக்காததால் கழிவுநீா் தேங்கி நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும், கழிவுநீா் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com