முருங்கைக்காய் வரத்து குறைவு

வெள்ளக்கோவிலில் செயல்பட்டு வரும் தனியாா் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்டது.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் முருங்கைக்காய்கள், வெள்ளக்கோவில் -முத்தூா் சாலை கொங்கு நகரில் செயல்பட்டு வரும் தனியாா் கொள்முதல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மையத்துக்கு கடந்த வாரம் 5 டன் முருங்கைக்காய் வரத்து இருந்த நிலையில், இந்த வாரம் 4 டன் மட்டுமே வரத்து இருந்தது. வரத்து குறைந்த நிலையிலும் விலை கூடவில்லை.

கரும்பு முருங்கைக்காய் கிலோ 20-க்கும், செடி முருங்கைக்காய் ரூ. 15 -க்கும், மர முருங்கைக்காய் ரூ. 12 -க்கும் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com