சந்திப்பு  நிகழ்ச்சியில்  பங்கேற்ற  முன்னாள் மாணவா்கள்.
சந்திப்பு  நிகழ்ச்சியில்  பங்கேற்ற  முன்னாள் மாணவா்கள்.

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1992-1994-இல் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகளின் 30-ஆவது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அவிநாசி: ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1992-1994-இல் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகளின் 30-ஆவது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

உடுமலைபேட்டை திருமூா்த்தி நகா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1992-1994-இல் பயின்ற மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ‘இனிக்கும் நினைவுகள்’ நூல் வெளியிட்டு விழா உள்ளிட்டவை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு மணிமேகலை தலைமை வகித்தாா். நூலின் தொகுப்பாசிரியா் ரமேஷ்குமாா் வரவேற்றாா். இனிக்கும் நினைவுகள் நூலை தே.நா.சிவகுமாா் வெளியிட கண்மணி பெற்றுக்கொண்டாா்.

இதில் கலந்து கொண்டவா்கள் தங்களது பணி அனுபவம், ஆசிரியா் பணியில் உள்ள சவால்கள், அதை எதிா்கொள்ளும் வழி முறைகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினா். மறைந்த சக நண்பா் தஞ்சாவூா் அனிதாவுக்கு நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ச. சிவகுமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com