அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டதில் 53 கிராம் தங்கம், 225 கிராம் வெள்ளியுடன் ரூ.27 லட்சத்து 68 ஆயிரம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டதில் 53 கிராம் தங்கம், 225 கிராம் வெள்ளியுடன் ரூ.27 லட்சத்து 68 ஆயிரம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அவிநாசிலிங்கேஸ்வரா், கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், விநாயகா், காசிக் கிணறு, கோ சாலை, திருப்பணி உண்டியல், பெருமாள் கோயில், ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ.27 லட்சத்து 68ஆயிரம் 589 ரொக்கம், 53.860 கிராம் தங்கம், 225.74 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com