சேவூரில் ரூ 6.75 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ 6.75 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

அவிநாசி: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ 6.75 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 7,300 கிலோ நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா். முதல் ரகம் கிலோவுக்கு ரூ.69.50 முதல் ரூ.72 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.64 முதல் ரூ.69 வரையிலும், மூன்றாம் ரகம் ரூ.55 முதல் ரூ.63.50 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com